வடக்கின் முதலாவது பெண் ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார்!
Thursday, January 2nd, 2020
வட மாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநராக திருமதி பி.எம்.எஸ். சாள்ஸ் இன்று (02) பிற்பகல் 1 மணிக்கு உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையின் சிறப்புத் தர அதிகாரியான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வட மாகாண ஆளுநராக கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.
சுகாதாரம் சுதேச மருத்துவத் துறை அமைச்சின் செயலாளராகவும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ள அவர் வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் மாவட்ட செயலாளராக நீண்டகாலம் சேவையாற்றிருந்தார்.
கடந்த ஒன்றரை மாதங்களாக வடக்கு மாகாண ஆளுநர் பதவி வெற்றிடமாக இருந்து வந்த நிலையில் இவர் பதவியைப் பொறுப்பேற்றார்.
Related posts:
துன்னாலையில் திடீர் சுற்றிவளைப்பு - மூவர் கைது!
கத்தோலிக்க மக்களின் புனித பூமியாகிறது மடு!
கடன் மறுசீரமைப்பில் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை பாராட்டியது ஐ.எம்.எப் - கடன் மறுசீரமைப்பு பேச்...
|
|
|


