வடக்கின் பல பாகங்களிலும் மின்தடை!
Wednesday, November 22nd, 2017
மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில்இன்று புதன்கிழமை(22) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம், நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். மாவட்டத்தில் மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, கொடுக்குழாய், ஆழியவளை, வெற்றிலைக்கேணி, வெற்றிலைக்கேணி இராணுவ முகாம்,கட்டைக்காடு, கேவில், கட்டைக்காடு இராணுவ முகாம் ஆகிய பகுதிகளிலும்,
காலை- 08 மணி முதல் மாலை- 05.30 மணி வரை வவுனியா மாவட்டத்தின் தவசிக் குளம் கிராமம், அட்டம்பஸ்கட கிராமம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் கூறியுள்ளார்.
Related posts:
நிவாரணப் பணிக்குச் சென்ற ஹெலிகொப்டர் விழுந்து நொருங்கியது!
தீக்காயங்களுக்குள்ளான இளம் குடும்பப் பெண் பலி !
பாடசாலையில் பெண்களின் பைகளை ஆண்கள் பரிசோதிப்பதை தவிர்க்க வேண்டும் - தமிழர் ஆசிரியர் சங்கம்!
|
|
|


