பாடசாலையில் பெண்களின் பைகளை ஆண்கள் பரிசோதிப்பதை தவிர்க்க வேண்டும் – தமிழர் ஆசிரியர் சங்கம்!

Friday, May 10th, 2019

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆசாதாரண சூழ்நிலையில் பாடசாலைக்குச் செல்லும் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மேலும் இதில் சில இடங்களில் பெண் ஆசிரியர்களின் கைப்பைகளும், பெண் பிள்ளைகளின் பைகளும் ஆண்களால் பரிசோதிக்கப்படுகின்ற போது சில சங்கடமான நிலை உருவாவதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளனர்.

ஆகையால் பரிசோதனையின் போது பெண்களின் பைகளை ஆண்கள் பரிசோதிப்பதைத் தவிர்க்குமாறு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் இவ் விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,

பெண்கள் தமது அத்தியாவசிய தேவைக்காகக் கொண்டு செல்லப்படும் பொருட்கள் அனைத்தும் முற்றாக வெளியில் கொட்டப்பட்டு சோதனை செய்யப்படுகின்றன.

இதைவிட மாணவிகளின் தோழில் வைத்தே பைகள் பரிசோதனை செய்யப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில் பலரும் தமது அதிருப்தியை வெளியிட்டு ஆண்கள் பரிசோதனையில் ஈடுபடுவதால் பலர் முன்னிலையில் சில விடயங்கள் தங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக எடுத்துரைத்துள்ளனர்.

இவற்றைத் தவிர்க்க பாடசாலையில் சோதனை நடவடிக்கைகளில் மிகுந்த அவதானத்துடன் நடந்துகொண்டு தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்குமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வினயத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts:

மக்களுக்காக வியர்வை சிந்தாதவர்களை அரசியல் பிரதிநிதிகளாக்கியதே தமிழ் மக்களது இன்றைய வாழ்வியல் நிலைக்க...
கண்டி - திகன நில அதிர்வுகள் குறித்த ஆய்வுக்குழுவின் அறிக்கை இம்மாத இறுதியில் சமர்ப்பிப்பு!
வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் காணிகளை மீள வழங்...

அரசாங்க அதிகாரிகள் மீது மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கை எனது ஆட்சியில் இருக்கக் கூடாது - ஜனாதிபதி!
மின்சாரம், சுகாதாரம் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு; இன்றுமுதல் நாடுமுழுவதும் பொது அமைதியை பேண ஆயுதம்...
தடுப்பூசி பற்றாக்குறையால் ரேபிஸ் ஆபத்து அதிகரிக்கிறது - பொது சுகாதார கால்நடை சேவைகள் பணிப்பாளர் நாயக...