ஜனாதிபதி தேர்தல் 2019: தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்!

Saturday, November 16th, 2019

2019 ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 5.00 மணியுடன் நிறைவடைந்திருந்த நிலையில் மாலை 6 அணிமுதல் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகின.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகின.

இம்முறை ஏற்றுக் கொள்ளப்பட்ட 20 அரசியல் கட்சிகள் மற்றும் 15 சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்தன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோட்டாபய ராஜபக்ஷவும் புதிய ஜனநாயக முன்னணி சார்பாக சஜித் பிரேமதாசவும், தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக  போட்டியிடுகின்றனர்.

மேலும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒருகோடியே 59 இலட்சத்து 92,096 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

நாடு பூராகவுமுள்ள 12,845 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில், வாக்களிப்புக்கள் நிறைவடைந்துள்ள நிலையில், வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் தேர்தல் நடவடிக்கைகளை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக 60,175 பொலிஸார் மற்றும் 8,080 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts:


சமூக இடைவெளியை பேணுவதில் சிரமம்: ஒரு நாள் சேவை தற்காலிகமாக நிறுத்தம் – ஆள்ப்பதிவுத் திணைக்களம் அறிவ...
நீரை சிக்கனமாக பயன்படுத்தவும் - கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகால...
ஒரு இலட்சம் மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் எதிர்வரும் செவ்வாயன்று நிறைவுறுத்...