கிழக்குத் திமோர் அரசுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த அமைச்சவை அங்கீகாரம்!

Wednesday, September 15th, 2021

திமோர் – லெஸ்டே கிழக்குத் திமோர் அரசாங்கம், இலங்கையுடன் இராஜதந்திர தொடர்புகளை முறையான வகையில் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான விருப்பத்தை இலங்கைக்கு அறிவித்துள்ளது.

இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் பல தற்போது அந்நாட்டுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளன.

கிழக்குத் திமோருடன் இராஜதந்திர தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகவும் அதேபோல் இராஜதந்திர தளங்களில் இலங்கையின் தலையீடுகளில் அந்நாட்டின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதும் முக்கியமாகும்.

அதற்கமைய, அந்நாட்டுடன் முறையான இராஜதந்திர தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: