ஓகஸ்ட் மாதம் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் 499.2 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவு!
Saturday, September 9th, 2023
கடந்த ஓகஸ்ட் மாதம் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் 499.2 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதன்படி, ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் மூவாயிரத்து 862.7 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் புதிய தரவுகளுக்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் 74.4 சதவீதமாக அதிகரிப்பை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்கக்கூடாது -கெஹெலிய.!
அவசியம் என்றால் நாளைய தினமே புதிய அரசாங்கத்தினை உருவாக்குவேன் - ஜனாதிபதி
சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!
|
|
|


