ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் – வெளியானது அறிவிப்பு!
Saturday, August 12th, 2023
இலங்கை கிரிக்கெட் (SLC) தொடர்பான நாடாளுமன்ற விவாதங்கள் மற்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கட்சித் தலைவர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.
இருப்பினும் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் (SLC) தொடர்பில் ஒரு நாள் விவாதம் நடத்தப்படும் என சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதன்படி சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


