கிளி,முல்லைமாவட்டங்களில் இயற்கைவளங்கள் பாதுகாக்கப்படவேண்டும்.

Saturday, May 6th, 2017

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இயற்கை வளங்கள் அதிகளவில் அழிக்கப்பட்டு வருவதாகவும், இதனைதடுக்க உரியதரப்பினர் நடவடிக்கை எடுக்கத் தவறினால் இயற்கைச் சமநிலை பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வடக்கில் இயற்கை வளங்களை அதிகளவில் கொண்ட மாவட்டங்களாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்கள் காணப்படும் நிலையில, யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் இயற்கை வளங்கள் வகை தொகையின்றி அழிக்கப்பட்டு வருகின்றன.

இதில் குறிப்பாக மணல்,கருங்கல், இல்மனைற் மணல், கிரவல் மண்அகழ்வு ஆகியவற்றுடன் காடழிப்பு, மரக்கடத்தல் போன்றவளங்கள் திட்டமிட்டவகையில் இடம்பெற்றுவருவதாகவும், இதற்குஅரசஅதிகாரிகள் துணைபோவதாகவும், இந்நடவடிக்கைகளால் .யற்றைச் சமநிலைபாரியளவில் பாதிக்கப்படுவதாகவும் மக்கள் கவலைதெரிவித்துள்ளனர்.

இவ்வளச் சுரண்டலை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு பொது அமைப்புக்களும், மக்களும் பலதடவைகள் கோரிக்கைகளை முன்வைத்தபோதிலும் இதுவரையில் எவ்விதமான அக்கபூர்வமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென்றும் சுட்டிக்காட்டியுள்ள சூழலியலாளர்கள் மணல் அகழ்வுகளுக்கான அனுமதிகள் உள்ளுர் தனிநபர்களுக்கோ அல்லது பொது அமைப்புகளுக்கோ வழங்காது தென்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலை தொடரும் பட்சத்தில் இம்மாவட்டங்களில் மக்களின இருப்புக்கு பாரியபாதகமான சுழலே உருவாகுமென்றும், இதனை இனிவரும் காலங்களிலாவது தடுத்து நிறுத்துவதற்கு உரியதரப்பினர் நடவடிககைஎடுப்பார்களா? உன்றும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: