வடக்கின் கல்வி அமைச்சின் செயலாளராக இளங்கோவன் நியமனம்!
Friday, June 21st, 2019
வடக்கின் கல்வித்துறையில் சுமத்தப்பட்டு வரும் தொடர் குற்றச்சாட்டுக்களை அடுத்து, வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
அதற்கமைய நான்கு மாதத்தில் கல்வித்துறையை சீராக்கும் நோக்குடன், ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவனை கல்வியமைச்சின் செயலாளராக நியமித்துள்ளார்.
இன்று காலையில் வடமாகாண அமைச்சு செயலாளர்களிற்கான உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது வடக்கு கல்வித்துறை தொடர்பாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதையடுத்து, நான்கு மாதங்கள் அதிரடி மாற்றமொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.
இதன்படி ஆளுநரின் செயலாளராக நீண்டகாலம் பதவிவகித்து வரும் எல்.இளங்கோவன், கல்வியமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது கல்வியமைச்சின் செயலாளராக உள்ள எஸ்.சத்தியசீலன், ஆளுனரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


