யாழ். தேசிய கல்வியியல் கல்லூரியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்!
Thursday, February 7th, 2019
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் நீண்டகாலமாக உள்ளன என்று கல்விச் சமூகம் தெரிவித்தது.
நூலக உதவியாளர், ஆய்வு கூட உதவியாளர், சாரதி, கட்டட வேலை செய்பவர், மின் வேலை செய்பவர், பாதுகாப்பு அலுவலர், சுகாதாரத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 34 வகையான வேலைகளுக்கு சுமார் 50 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
இது தொடர்பில் கல்லூரி நிர்வாகத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது: கல்விசாரா ஊழியர்களின் வெற்றிடங்களை நிரப்பித்தாருங்கள் என்று கல்வி அமைச்சின் அனைத்துக் கூட்டங்களிலும் கோரிக்கை முன்வைத்தோம். இறுதியாக வந்த மதிப்பீட்டுக் குழுவுக்கும் இதுபற்றித் தெரியப்படுத்தியுள்ளோம் ஆனால் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புறக்கணிப்பு!
அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது - அரச அச்சகம் அறிவிப...
இரண்டு இல்லங்களை உடனடியாக மூடுவதற்கு உடன் நடவடிக்கை - நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத...
|
|
|


