சட்ட விரோதமாக ரீ யூனியன் தீவிற்கு சென்ற இலங்கை மீனவர்கள்!
Monday, January 7th, 2019
ரீ யூனியன் தீவிற்கு சட்ட விரோதமான முறையில் சென்ற 7 இலங்கை மீனவர்களை மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள ரீ யூனியன் தீவிற்கு சட்ட விரோதமான முறையில் நுழைந்த 7 மீனவர்களை கடந்த வாரம் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் கைது செய்திருந்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி டுஓசத புதாடு என்ற படகில் ரீ யூனியன் தீவிற்கு பயணித்த நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 7 மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த மீனவர்களில் ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டிருந்த நிலையில் நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளதாகவும் மேலும் இருவர் இன்று திருப்பி அனுப்பப்பட உள்ளதாகவும் மீன்பிடி திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்க பணிப்பு – ஜனாதிபதி!
விடைத்தாள் திருத்த கட்டணத்தில் மாற்றமில்லை - பரீட்சைகள் திணைக்களம்!
ஈ.பி.டி.பி ஆதரவுடன் யாழ் மாநகரின் புதிய முதல்வராக மணிவண்ணன் தெரிவானார்!
|
|
|


