ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி:மத்திய வங்கி ஆளுநரிடம் கேள்வி!
Sunday, December 4th, 2016
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாது போனமை குறித்து மத்திய வங்கி ஆளுநரிடம் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அண்மையில் நாடாளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்ற பொருளாதார விடய குழுக்கூட்டத்தின் போது இந்தக்கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.இந்தநிலையில் உரிய பணிகளை முன்னெடுக்கவேண்டும் என்று பிரதமர் இதன்போது மத்திய வங்கியின் ஆளுநரிடம் கோரியுள்ளார்.
இந்தக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் சிலர், ரூபாவின் வீழ்ச்சியை 147 ரூபா 50சதத்துக்கு உட்பட்டநிலையில் வைத்திருக்கவேண்டும் என்ற ஜனாதிபதியின் விருப்பத்தை நினைவுப்படுத்தினர்.

Related posts:
எல்லை மீள்நிர்ணய வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேலதிகமாக ஆராய தீர்மானம்!
வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் இலக்குடன் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் 12 ஆம் நாடாள...
2500 வைத்தியர்கள் புதிதாக சேவையில் - சுகாதார அமைச்சு திட்டம் வகுப்பு என சுகாதார அமைச்சின் செயலாளர் த...
|
|
|


