அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!
Thursday, November 10th, 2016
2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
ஒரு கிலோ கிராம் பயறு 15 ரூபாவாலும் நெத்தலி 5 ரூபாவாலும் விலை குறைக்கப்பட்டுள்ளது.ஒரு லீட்டர் மண்ணெண்ணெயின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், சமையல் எரிவாயு (கேஸ்) 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒரு கிலோ கிராம் வௌ்ளைச் சீனியின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், 1 கிலோ கிராம் பருப்பின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கு 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, 400 கிராம் உள்நாட்டுப் பால்மாவின் விலை 250 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts:
வலிகாமம் தெற்கு முன்பள்ளிகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு!
அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள், எரிவாயு தடையின்றி விநியோகிக்கப்படும் – துறைசார் தரப்பினர் அறிவிப்ப...
அடுத்த 3 வாரங்களில் டெல்டா தொற்று மோசமடைய வாய்ப்பு – மக்களின் பொறுப்பற்ற நடமாட்டத்தைத் தடுக்க காத்தி...
|
|
|


