எல்லை மீள்நிர்ணய வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேலதிகமாக ஆராய தீர்மானம்!

Friday, November 17th, 2017

உள்ளுராட்சிகளின் எல்லை மீள்நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 22 ஆம் திகதி மேலதிகமாக ஆராய்வதற்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கட்டளையொன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. கொழும்பு, கண்டி, மாத்தறை மற்றும் எம்பிலிப்பிட்டிய உள்ளிட்ட பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஆறு வாக்காளர்களே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த வர்த்தமானி அறிவித்தல், அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், அதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர் எல்லை நிர்ணயம் தொடர்பாக நியமிக்கப்பட்ட முதலாவது குழுவின் பரிந்துரைகளுக்கு எதிராக, உப குழுவின் பரிந்துரைகளை மாத்திரம் வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts: