ரஷியா மீது அபராதம்!

Monday, June 13th, 2016

தனது நாட்டின் கால்பந்து ரசிகர்களின் தவறான நடத்தை என்று கருத்து தெரிவித்துள்ள ரஷிய விளையாட்டுத்துறை அமைச்சர் விட்டலி முட்கோ, அதற்காக ஐரோப்பிய கால்பந்து அதிகாரிகள் ரஷியா மீது அபராதம் விதிக்கலாம் என கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதியில் வன்முறை சம்பவங்கள் நடந்தேறியதால், ரஷியா மீது ஒழுங்கு நடவடிக்கையை துவங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பிரான்ஸில் நடைபெறும் யூரோ 2016 கால்பந்து போட்டிகளில் பாதுகாப்பு அதிகரிப்படும் என யுஇஃபா தெரிவித்துள்ளது. இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்கம் மீது எவ்விதமான ஒழுங்கு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

கூட்டத்தில் இடையூறு செய்தது, இனவெறியைத் தூண்டியது மற்றும் பட்டாசுகளை வெடிக்க வைத்தது போன்ற குற்றச்சாட்டுகள் ரஷியா மீது சுமத்தப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ள ஒழுங்கு நடவடிக்கை கூட்டத்தில் இந்த விஷயத்தில் தடை குறித்தான முடிவுகள் எடுக்கப்படும்

 

Related posts: