எதிர்வரும் புதன்கிழமைமுதல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்க முடியும் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
Sunday, May 29th, 2022
3,500 மெட்ரிக் டன் சமையல் எரிவாயு தாங்கிய கப்பல் நாளையதினம் இலங்கையை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் புதன்கிழமைமுதல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, இன்றைய தினம் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களைக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கையின் நிதிக் கொள்கையின் ஸ்திரத்தன்மை காலத்திற்கு பொருத்தமானது - மத்திய வங்கி!
நிர்மாண பொருட்களின் விலை குறைப்பில் அதிகாரிகள் அசமந்தம் - கட்டுமான சங்கம் குற்றச்சாட்டு!
மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!
|
|
|


