பணிப்புறக்கணிப்பை கைவிட்டனர் எரிபொருள் புகையிரத சாரதிகள்!
Tuesday, November 27th, 2018
எரிபொருள் புகையிரத சாரதிகள் நேற்று(26) மாலை முதல் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு இன்று(27) காலை கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
புகையிரத முகாமையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.
எரிபொருள் புகையிரத சாரதிகள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு எதிராக இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று இடம்பெற்ற சந்திப்பில் எரிபொருள் புகையிரத சாரதிகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என புகையிரத செலுத்துனர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட குறிப்பிட்டார்.
Related posts:
பரீட்சையின் போது மேலும் 10 நிமிடங்கள் வழங்க நடவடிக்கை!
தெற்காசியாவிலேயே குறைந்த விலையில் டீசல் விற்பனை இலங்கையில் - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெர...
யாழில் பெற்றோரின் முறையான கண்காணிப்பு இன்மையாலேயே அதிகளவு வன்முறை சம்பவங்களுக்கு காரணம் - மாவட்ட பிர...
|
|
|
முன்பள்ளி சிறார்களுடன் அவர்களை வழிநடத்தும் ஆசிரியர்களது எதிர்காலமும் சிறப்பானதாக அமைய நடவடிக்கை மேற்...
பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு...
உலக வெற்றியை அடைய மனிதன் சுயநலத்தை விட்டொழித்து நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் - ஜனாதி...


