பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Monday, January 22nd, 2024

பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் அவர்களது சுயாதீனமானதும், சுதந்திரமானதுமான உரிமைகள் பறிக்கப்பட முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன வெளிவிவகார மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பான அமைச்சர் ரியாட் மல்குடனான சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உகண்டாவின் கம்பாலா நகரில் இன்று ஆரம்பமான ‘ஜீ77 மற்றும் சீனா’ 3 ஆவது தென் துருவ மாநாட்டுடன் இணைந்ததாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் பாலஸ்தீனர்கள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது என்பதை தொடர்ந்து வலியுறுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

காஸா பகுதியில் மோதல்களைத் தடுத்து சமாதானத்தை நிலைநா ட்டுவதற்கு ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தின் வேலைத்திட்டத்திற்கு இலங்கை பூரண ஆதரவை வழங்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், 5 வருடங்களுக்குள் பாலஸ்தீன அரசை ஸ்தாபிப்பதே இலங்கையின் நிலைப்பாடாக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் அவர்களின் சுயாதீனமானதும், சுதந்திரமானதுமான உரிமைகளைப் பறிப்பதற்கு முடியாது என்ற விடயத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


சுகாதார சேவைக்காக வைத்தியசாலைகளுக்கு வருவோரை சங்கடத்திற்குள்ளாக்க வேண்டாம் - சுற்றறிக்கை வெளியீடு!
கொரோனா அச்சுறுத்தல் - நாட்டில் தொழிலற்றோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ...
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூலம் பயங்கரவாதத்திற்கு எதிரானதே தவிர, ஜனநாயகத்திற்கு எதிரானதல்...