யாழ் மாநகர சபையின் 2020 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் மீண்டும் தோற்கடிப்பு!
Friday, December 13th, 2019
யாழ் மாநகர சபையின் 2020 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் இரண்டாவது தடவையாக சபைக்கு கொண்டுவரப்பட்டு முதல்வர் ஆர்னோல்ட் அவர்காளால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பாதீடு மீண்டும் தோற்கடிக்கப்பட்டது.
குறித்த பாதீடு பகிரங்க வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது ஈழமக்கள் ஜனநாயக கட்சி தமிழ் தேசிய மக்கள் முன்னணி சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளின் எதிர்ப்பு காரணத்தால் 5 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
இதன்போது சபையில் 43 உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்ததுடன் ஆதரவாக 19 வாக்குகளும் எதிராகா 24 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் பாதீடு 5 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்துவது குறித்த அடுத்த அறிவிப்பு : ஜனாதிபதி ஊடக பிரிவு!
கிடைக்கின்ற பயனை எதிர்கால பொருளாதாரத்திற்கான முதலீடாக உருவாக்கிக் கொள்ளுங்கள் – ஈ.பி.டி.பியின் யாழ் ...
சீரான போக்குவரத்துக்கு வசதிகளை செய்து தாருங்கள் - வடமராட்சி கிழக்கு பிரதேச மக்கள் கோரிக்கை!
|
|
|


