சீரான போக்குவரத்துக்கு வசதிகளை செய்து தாருங்கள் – வடமராட்சி கிழக்கு பிரதேச மக்கள் கோரிக்கை!

Tuesday, December 26th, 2023

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு சீரான போக்குவரத்துக்கு  வசதிகளை செய்துதர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு நோக்கி நேற்று மாலை சேவையை ஆரம்பித்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து கைதடி பகுதியில் பழுதடைந்து நிற்பதாக பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து மாலை 5.15 மணிக்கு கட்டைக்காடு பிரதேசத்துக்கு சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் கைதடி சித்த வைத்தியசாலைக்கு முன் பழுதடைந்து மேற்கொண்டு  பயணிக்கமுடியாமல் நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம் யாழ்ப்பாணம் கட்டைக்காடு சுமார் 70 கிலோமீற்றர் தூரத்தைக்கொண்டது. இவ்வாறான தூர பிரதேசத்துக்கு  நல்ல நிலையில் உள்ள பேருந்தை விடாமல்  மிகவும் பழுதான பேருந்து சேவையில் ஈடுபடுவதாக நாளாந்தம் பயணம் செய்யும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ச்சியாக வடமராட்சி  கிழக்குக்கான இ.போ.ச.பேருந்துகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஆகவே இது தொடர்பில் உரிய தரப்புக்கள், அரசியல் பிரதிநிதிகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


அநீதியான முறையில் வியாபார நடவடிக்கை - கடந்த வருடம் 15,923 சுற்றிவளைப்புக்களூடாக 6 கோடிக்கும் அதிக பண...
3 ஆம் திகதி வரை மழை தொடரும்; 9ஆம் திகதி மற்றொரு தாழமுக்கம் – யாழ் பல்கலைக்கழக புவியற்துறை விரிவுரையா...
ஆலய வழிபாட்டுக்குசெல்லும் பெண்களைக் குறிவைக்கும் யாழ்ப்பாணத் திருடர்கள் – ஒருவரை கைது செய்துள்ளதாக ப...