ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பாகிஸ்தானுக்கு பயணம் – மத்திய கிழக்கின் பதற்றநிலை மேலும் அதிகரிப்பு!

Monday, April 22nd, 2024

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இன்று திங்கட்கிழமை (22) பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ அழைப்பையடுத்து அவர் இஸ்லாமாபாத்திற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஈரானிய ஜனாதிபதி மற்றும் உயர்மட்ட அமைச்சரவை குழுவுடன் தலைநகரை இன்று காலை வந்தடைந்தாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அவர் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“ஹபாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஆகியோர் பிரதமர் இல்லத்தில் சந்திப்பார்கள்” என ஷெரீப்பின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளும் முதல் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கு பாகிஸ்தான் மற்றும் ஈரானின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு மத்தியில் இந்த ஈரான் ஜனாதிபதியின் இந்த விஜயம் முக்கியத்துவம் பெறுகின்றது.

மேலும் ஆப்கானிஸ்தான் நிலவரங்கள் மற்றும் பலஸ்தீன விவகாரம் உள்ளிட்ட பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

போர் பதற்றங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இப் பயணம் தொடர்பாக மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூடுதல் அவதானம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்ட அனைவருக்கும் இரண்டாவது தடுப்பூசியை உரிய காலத்தில் பெற்றுக்கொடுங்க...
இன்று 3 மணிமுதல் புதிய களனிப் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டில் - வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவிப்பு!
வடக்கில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படையின் முதனிலை செயலாளர...