முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்ட அனைவருக்கும் இரண்டாவது தடுப்பூசியை உரிய காலத்தில் பெற்றுக்கொடுங்கள் – சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு!

Thursday, September 2nd, 2021

முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்ட அனைவருக்கும் இரண்டாவது தடுப்பூசியை உரிய காலத்தில் பெற்றுக்கொடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மாவட்ட ரீதியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் அவர் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

30 வயதுக்கும் 60 வயதுக்கும் உட்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகிய வயது பிரிவினருக்கு தற்போது தடுப்பூசி வழங்கப்பட்டு வருவதாகவும் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் மட்டத்தில் அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகள் தொடர்பில் பல்வேறு மாவட்டங்களிலுமிருந்து முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் அது தொடர்பில் அடையாளம் கண்டு அதை சீர்செய்யுமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாகாண சுகாதார பணிப்பாளர்கள் மற்றும் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிகள் ஆகியோருக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்தி அந் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: