சத்திரசிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு சுகாதார அமைச்சு நிபந்தனை!

Friday, July 22nd, 2016
நாட்டிலுள்ள தனியார் வைத்தியசாலையில், நோயாளி ஒருவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொண்டதன் பின்னர் உடனடியாக மருத்துவர்கள் வெளியேற முடியாது என சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

தனியார் வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டால், நோயாளிகள் அருகாமையில் மருத்துவர் குறைந்தபட்சம் ஒரு மணித்தியாலங்கள் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பிலான உத்தரவு தனியார் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சத்திரசிகிச்சையின் போது நோயாளிகள் எதிர்நோக்கக்கூடிய ஏனைய பாதிப்புக்களை தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவினை மீறிச் செயற்படும் வைத்தியசாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க்பபடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தனியார் வைத்திய சனலிங் சேவைகளை நடத்தும் மருத்துவர்கள் ஒரு நோயாளிக்கு குறைந்த பட்சம் 10 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும் என்ற உத்தரவு ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Related posts: