புதிய பாதீடு வரும் வரையில் புதிய நியமனங்கள் வேண்டாம் – திறைசேரிப் பணிப்பாளர்!

Thursday, January 17th, 2019

புதிய வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் வரையில் புதிய நியமனங்கள் எவையும் வழங்க முடியாது. எவருக்கும் எந்தவொரு நியமனமும் வழங்கக்கூடாது என்று திறைசேரிப் பணிப்பாளர் நியமன அதிகாரிகளுக்கு எழுத்தில் அறிவித்துள்ளார்.

இலங்கையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இதுவரை சமர்ப்பிக்கப்படாத நிலையில் மேலதிக செலவுகளுக்கான அனுமதி வழங்குவதில் உள்ள நெருக்கடிகளைத் தவிர்க்கும் வகையில் புதிய நியமனங்கள் எவையும் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்படும் வரையில் வழங்க முடியாது. 2018 ஆண்டு டிசெம்பர் மாதத்துக்கு முன்னர் இருந்த அரச பணியாளர்களுக்கான தொடர் சம்பளம் கணக்கறிக்கை மூலமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

புதிய நியமனம் வழங்கினால் அவர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சட்ட நெருக்கடி ஏற்படும். அதனைத் தவிர்க்கும் வகையில் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பித்து அனுமதிக்கப்படும் வரையில் புதிய நியமனம் எவற்றையும் வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts:

வித்தியா கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட பத்தாவது சந்தேக நபரின் விளக்கமறியல்  ஒரு மாதத்திற்கு நீடிப்பு...
கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கு அச்சம் கொள்ள தேவையில்லை - இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்பு...
நன்னீர் மீன்பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கில், தாண்டிகுளத்திலும் ஒருதொகுதி மீன் குஞ்சுகள் ஈ.பி.டி.பி...