நன்னீர் மீன்பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கில், தாண்டிகுளத்திலும் ஒருதொகுதி மீன் குஞ்சுகள் ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட MP திலீபனால் விடப்பட்டன!

Wednesday, March 3rd, 2021

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவிற்கு அமைய வவுனியா மாவட்டத்தில்  நன்னீர் மீன்பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கில், தாண்டிகுளத்தில் ஒருதொகுதி மீன் குஞ்சுகள் ஈழ மக்கள் ஜனநாயகக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான குலசிங்கம் திலீபனின் தலைமையில் விடப்பட்டன.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவிற்கு அமைவாக வடக்கு மாகாணத்தின் பல பாகங்களிலுமுள்ள பருவகால நீர்த் தேக்கங்களை மையப்படுத்தி இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கமைய வவுனியா மாவட்டத்தில் 2,45000 நன்னீர் மீன்குஞ்சு விடும் திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக தாண்டிகுளத்தில் இன்றையதினம் ஒருதொகுதி மீன்குஞ்சுகளை நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் விடுவித்திருந்தார்.

முன்பதாக நன்நீர் நிலைகளை பெருமளவில் கொண்ட வவுனியா மாவட்டத்தில் நன்நீர் மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் முகமாக மாவட்டத்தின் பல்வேறு குளங்களில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்தின் அடிப்படையில் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.  

பருவகால நீர்த் தேக்கங்களை மையப்படுத்தியதாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்தினூடாக விடப்படும் மீன்கள் எதிர்வரும் மூன்று மாதங்களின் பின்னர் அறுவடைக்கு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் இதன் மூலம் கிராமிய நன்னீர் மீன்பிடிப்பாளர்கள் தமது வருமானத்தை பெருக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கில் சௌவ்பாக்கியா என்னும் ஶ்ரீநிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்  ஊக்குவிக்கப்பட்ட உற்பத்தியாளர்களின் உற்பத்தி பொருட்களை பார்வையிடும் நிகழ்வு ஒன்று வவுனியா  மணிபுறம்  பகுதியில் இன்றையதினம் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான குலசிங்கம் திலீபன் பிரதம விருந்தினராககலந்து சிறப்பித்திருந்ததுடன் உள்ளூர் உற்பத்திகளை பெருக்குவதற்கு தன்னாலான முயற்சிகளை  மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்து தூக்கிக் கொண்டு செல்வதை நிறுத்துங்கள் - பொலிஸ் மா அதிபர் அவசர உ...
500 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு - கைத்தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு...
இலங்கையின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் 5 ஆயிரத்தைக் கடந்தது – பாதுகாப்பாக இருக்குமாறு சுகாதார பக...