கிடைக்கின்ற பயனை எதிர்கால பொருளாதாரத்திற்கான முதலீடாக உருவாக்கிக் கொள்ளுங்கள் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ரங்கன்!

Monday, December 20th, 2021

சமுர்த்தி திட்டத்தின் பயனை எதிர்கால நலனுக்காக பயன்படுத்தி அதனூடாக கிடைக்கின்ற வரப்பிரசாதங்களை கொண்டு வாழ்’வில் பொருளாதார ரீதியில் வெற்றிபெற்றவர்களாக உருவாக வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை சமுர்த்தி வங்கியில் இன்றையதினம் இடம்பெற்ற ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக சமுர்த்தி சௌபாக்கிய நிகழ்வில் கலந்துகொண்டு பயனாளர்களுக்கான உதவித்திட்டங்களை வழங்கி வைத்தபின் கருத்துரைக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாட்டில் கடும் யுத்தம் நடைபெற்ற காலத்தில் அன்றைய ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டமானது அக்கால சூழ்நிலையை கருத்திற் கொண்டு எமது பகுதிக்கு கொண்டுவருவதில் பின்னடிப்பு நிலை காணப்பட்டது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் குறித்த திட்டம் கிடைக்கப்பெறாது என இருந்த காலத்தில் அன்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய எம்மிடம் இருந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்தைக் கொண்டு இந்த திட்டத்தை நாம் எமது மக்களின் நலனை முன்னிறுத்தி பெற்றுக்கொடுத்திருந்தோம்.

அதன்பின்னரான காலத்தில் குறித்த திட்டமமானது பல்வேறு பெயர்களிலும் பல்வேறு வழிகளிலும் பரிணாமம் பெற்று எமது பிரதேசத்தில் வாழும் வறிய மக்களின் பொருளாதாரத்திற்கு பெரிதும் துணையாக இருந்த வருகின்றது.

இந்நிலையில் தற்போது ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் நாட்டை பொருளாதாருத்தால் கட்டியெழுப்புவோம் என்றும் சுபீட்சத்தின் நோக்கின் திட்டத்தினூடாக புதிதாக மிளாய்வு செய்யப்பட்டு மேலும் சிறப்பான வகையில் கறித்த திட்டத்தை பெற்றுக்கொள்ள தகுதியான அனைவருக்கும் பெற்றுக்கொடக்கப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய உதவிகளை நீங்கள் பெற்றுக்கொள்வது உங்களது எதிர்காலத்தின் பொருளாதார  ஈட்டல்களுக்கானது என நினைவில்கொண்டு அதனூடாக உங்கள் வாழ்வை வழப்படுத்திக்கொள்வீர்கள் என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: