யாழ் மாநகரின் முன்னாள் ஆணையாளர் தவறான வழிநடத்தல் – பறிபோகிறது மருத்துவபீடத்தின் வரப்பிரசாதம் – நடவடிகை எடுக்குமாறு இரா செல்வவடிவேல் வலியுறுத்து!

Thursday, May 20th, 2021

யாழ் மாசகரசபையின் முன்னாள் ஆணையாளரின் தவறான வழிநடத்தலால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு கிடைக்க வேண்டிய யாழ் மத்திய பகுதியிலுள்ள காணி அவர்களுக்கு கிடைக்காது கைநழுவிப் போகும் வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் இரா செல்வவடிவேல் இது குறித்த மாநகரசபையில் நிறைவேற்றப்பட்ட கடந்தகால தீர்மானத்தை புரட்டிப்பார்த்து குறித்த நிலப்பரப்பை மருத்துவபீட மாணவர்களின் நலன்கருதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் முதல்வர் மணிவண்ணன் தலைமையில் சுகாதார வழிமுறைகளுடன் நடைபெற்றது.

இதன்போது பல்வேறு விடயங்கள் தாடர்பில் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றிருந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பிலான விவாதத்தின்போதே இரா செல்வவடிவேல் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவேர் மேலும் தெரிவிக்கையில் –

யாழ் மத்திய பேருந்து நிலையமருகே உள்ள மின்சார சபை காணி கடந்த ஆட்சிக்காலத்தில் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் செயலாளர் நான் இருந்தபோது அன்று மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக இருந்த மருத்துவ கலாநிதி பாலகுமாரன் குறித்த காணியருகே உள்ள நிலப்பரப்பில் மருத்துவ பீடத்தின் கட்டடத் தொகுதி அமையவுள்ளதால் குறித்த காணியையும் தமக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

குறித்த கோரிக்கையானது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிடம் அன்று கொடுக்கப்பட்டிருந்த நிலையில் அது குறித்து நிபுணத்துவம் மிக்கவர்களுடன் ஆராய்ந்து குறித்த காணி மருத்துவ பீட தேவைக்கு உகந்தது என கண்டறியப்பட்டது.

இந்நிலையில் குறித்த மின்சாரசபையை அமைக்க பழைய பூங்காவில் இடம் கொடுப்பதாகவும் தற்போதுள்ள பேருந்து நிலைய காணியும் கட்டடமும் மீளவும் மாநகரசபை பொறுப்பெடுத்து அதன்பின்னர் குறித்த காணியை வைத்தியசாலையின் மருத்துவ பீடத்துக்கு கொடுப்பதாகவும் மாநகர சபை தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

இந்நிலையில் மாநகரசபை கலைந்தபின்னர் 2016 2017 ஆண்டுகளில் யாழ் மாநகரசபையை ஆணையாளர் நிர்வகித்திருந்தபோது இவ்விடயம் மீளவும் கையிலெடுக்கப்பட்டது. இதையடுத்து ஆணையாளர் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பார்வைக்கு குறித்த விடயத்தை கொண்டு சென்றிருந்த நிலையில் அங்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டிருந்த நடவடிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஆணையளர் குறித்த விடயத்தை தான் புதிதாக கொண்டுவருவது போன்று முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளார். முதலமைச்சரும் வழமைபோன்று எதனையும் தீர ஆராயாது பண்ணை மீனாட்சிபுரம் காணியை மாநகரசபைக்கு கொடுப்பதாகவும் மின்சார சபையை அதே இடத்தில் இருப்பதற்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த மீனாட்சிபுர காணி தற்போது இராணுவத்தினரது பாவனையில் இருந்துவந்தாலும் குறித்த காணி எந்தவகையிலும் மாநகர சபையின் தேவைக்கு ஏற்றதாக அமையாததொன்றும் என்றும் தெரியவருகின்றது

ஆணையாளரின் தவறான நடவடிக்கையால் இன்று குறித்த காணி மருத்துவ பீடத்தின் தேவைக்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றது.

எனவே கடந்தகால பதிவுகளையும் தீர்மானங்களையும் சரியாக ஆராய்ந்து இம்முறையாவது குறித்த காணியை மருத்துவ பீட தேவைக்காக அதை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்த இரா செல்வவடிவேல் இவ்வாறான தவறான நடவடிக்கைகள் இனியொருபோதும் இடம்பெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே 2016 2017 ஆண்டுகளில் யாழ் மாநகரசபைனி ஆணையாளராக வாகீசன் இருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: