சமுர்த்தி பயனாளிகளுக்கு இலவச மின்சாரம் – அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க!
Sunday, January 15th, 2017
நாட்டிலுள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கு சூரிய சக்தி மூலம் இலவசமாக மின்சாரம் வழங்கும் வேலைத் திட்டத்தினை எதிர்காலத்தில் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு பதிலாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் கூறினார்.
குறித்த வேலைத் திட்டத்தை இலங்கை மின்சார சபை மற்றும் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சும் இணைந்து மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.
மேலும் அதன்கீழ் அனைத்து வீடுகளுக்கும் சூரியசக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை பொருத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் – பரீட்சை எழுத மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் கல்வி...
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வேதனம் வழங்க உத்தரவு!
சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகை இம்மாதத்திற்குள் கிடைக்கும் - அமைச்சர் அலி சப்ர...
|
|
|


