மேலும் 293 ஆயுர்வேத வைத்தியர்களை இணைக்க தீர்மானம்!

Monday, August 7th, 2017

புதிய ஆயுர்வேத வைத்தியர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எச்.திலகரத்ன தெரிவித்தள்ளார்.

இது தொடர்பாக சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சின் மேலதிக தகவர தருகையில் புதியதாக 293 ஆயுர்வேத வைத்தியர்களை சேர்த்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான விபரம் கடந்த ஜூன் மாதம் 7ஆம் திகதி வெளியாக வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அடுத்த மாதம் இந்த நியமனங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்கும் முன்னிலைப் பட்டியலுக்கு அமைய நியமனம் வழங்கப்படும். தற்போது ஆயுர்வேத வைத்தியர்களாக தகுதி பெற்றுள்ள சுமார் 600 பேர் இருப்பதாக அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எச்.திலகரத்ன மேலும் கூறினார்.

Related posts: