மின்சார கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் மின்சார சபை மற்றும் மின்சார அமைச்சு தவிர வேறு எந்த அமைச்சும் எஞ்சியிருக்காது – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சுட்டிக்காட்டு!

Thursday, October 26th, 2023

மின்சார சபையின் வருமானம் மற்றும் செலவுகளை சமன்படுத்தும் வகையில் மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ள போதிலும் ,மின்சார கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் மின்சார சபை மற்றும் மின்சார அமைச்சு தவிர வேறு எந்த அமைச்சும் எஞ்சியிருக்காது என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தற்போதைய சூழ்நிலையில் புதிய முதலீட்டாளர்களை வரவழைப்பது ஒருபுறமிருக்க, தற்போதுள்ள முதலீட்டாளர்களை தக்கவைப்பதில் சிக்கல் உள்ளது.

இதேவேளை, மொட்டுக்கட்சி சார்பாக உள்ள பிரதானிகள் எழுப்பிய குற்றச்சாட்டின் பிரகாரம் மொட்டுக்கட்சியின் அமைச்சில் வெட்டுக்கள் ஏற்பட்டுள்ளதாக நான் நம்பவில்லை.

மஹிந்த அமரவீரவுக்கு கைத்தொழில் அமைச்சர் பதவியும், கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு சுற்றாடல் அமைச்சர் பதவியும், ரமேஷ் பத்திரனவுக்கு சுகாதார அமைச்சர் பதவியும் அமைச்சரவைத் திருத்தத்தின் மூலம் கிடைத்துள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.

000

Related posts: