தமிழகத்திலிருந்து 15,000 மெட்ரிக் டன் மனிதாபிமான உதவி பொருட்களுடனான கப்பல் நாட்டை வந்தடைந்தது!

Friday, June 24th, 2022

தமிழ்நாட்டிலிருந்து இலங்கை மக்களுக்காக அனுப்பப்பட்ட மனிதாபிமான உதவிகள் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளன.

இந்திய உயர்ஸ்தானிகரகம் தமது உத்தியோகபூர்வ ட்விட்டரில் இதனைத் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியிலிருந்து நேற்றுமுன்தினம் புறப்பட்ட குறித்த கப்பல் இன்றையதினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இக்கப்பலை வரவேற்கும் நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

முன்னதாக இந்தியாவினால் வழங்கப்பட்ட முதல் தொகுதி மனிதாபிமான உதவிகள் கடந்த மே 18 ஆம் திகதி கிடைந்திருந்த நிலையில், இன்றையதினம் இரண்டாம் கட்ட உதவிப் பொருட்கள் கிடைத்துள்ளன.

தமிழகத்திலிருந்து வருகைதந்துள்ள இக்கப்பலில் சுமார் 15,000  மெட்ரிக் டன் பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அவற்றில் அரிசி, பால்மா மற்றும் அத்தியாவசிய மருந்துகள் அடங்கியுள்ளதாகவும் உயர்ஸ்தானிகராலம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இலங்கைக்கு இந்தியா வழங்கும் உதவிகள் தொடரும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: