அத்தியாவசியப்பொருட்களுக்கு விலைகுறைப்பு : சதொச நிறுவனம் அறிவிப்பு!
Friday, April 5th, 2019
எதிர்வரும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் அத்தியாவசியப்பொருட்கள் பலவற்றின் விலைகளை குறைத்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தாரிக் அறிவித்துள்ளார்.
இதே வேளை சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் மேலும் 15 சதொச கிளைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் களுத்துறை தனமல்விலயில் இரண்டு கிளைகள் திறந்துவைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார் .
அத்துடன் தற்போது 411 ஆக இருக்கும் சதொச கிளைகள் இவ்வருட முடிவுக்குள் 500 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
இன்று இரவு 10 மணிமுதல் 30 ஆம் திகதிவரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு - சுகாதார அமைச்சர் கெஹ...
நாட்டை அழிக்கும் பாதாள உலகத்தை ஒழிப்பது பாவமல்ல - பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவிப்பு!.
|
|
|



