கொரோனா தொற்று உறுதியாகும் சிறுவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி – சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Sunday, October 24th, 2021

ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் கொவிட் தொற்று உறுதியான நிலையில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அங்குள்ள கொவிட் சிகிச்சைப் பிரிவுகள் சாதாரண சிகிச்சைப் பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர்கள் சங்கத்தின் தலைவரும் ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியருமான ஷாமன் ரஜிந்ரஜித் சிறுவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது மிகவும் அவசியமானது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான பரிந்துரைகளை விரைவில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்டளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: