யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு மேலதிக கடமை வழங்கப்பட்டமை மாகாண அதிகாரத்தை பறிக்கும் சூழ்ச்சி – எஸ். தவராசா குற்றச்சாட்டு!

Saturday, April 6th, 2019

மாகாணத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீண்டும் மத்திக்கு பறிக்கும் சூழ்ச்சிகரத் திட்டத்தின் புதிய வடிவமாகவே, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளரை யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளராகவும் பணியாற்ற அனுமதிக்கும் செயல் அமையும் என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது –

மாகாணத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீண்டும் பறித்தெடுப்பதில் அரசு எப்போதும் சூழ்ச்சிகரத்துடனேயே செயற்படுகின்றது. ஏற்கனவே காணி, மாவட்டச் செயலகம் உள்ளிட்ட அதிகதாரங்களை விழுங்கி விட்டது. பின்னர் பிரபல பாடசாலைகளையும் தேசிய பாடசாலை எனும் பெயரில் விழுங்கவும் முயற்சிக்கிறது.

இந்த நிலையில் புதிய வடிவமாக சுகாதாரத்திணைக்களத்தின் மீதும் கண்பார்வை திரும்பியுள்ளதையே, யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனைப்பணிப்பாளரே பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் பணியாற்ற அனுமதிக்கும் செயல் அமையும். நியமனச் சிபார்சு ஆளுநருக்கு உட்பட்டதே அன்றி மத்திய அரசுக்கு உட்பட்டதல்ல. இரு அரசின் கீழும் ஏக காலத்தில் ஒரு அலுவலர் ஒருபோதும் பணியாற்ற முடியாது. பணியாற்றவும் கூடாது.

மாகாண சபை முறைமை வந்த காலம் தொடக்கம் அகில இலங்கை சேவையாளர்களை மத்திய அரசு மாகாணத்துக்கு விடுவிக்க வேண்டும். அவர்களை எங்கே நியமிப்பது என்பதை மாகாணமே தீர்மானிக்க வேண்டும். ஏனைய அனைத்துச் சேவைகளும் அவ்வாறே இடம்பெறுகின்றன. மருத்துவ சேவையில் மட்டும் மருத்துவர்களின் வற்புறுத்தலின் பெயரில் அதிகாரம் தொடர்ந்தும் மத்தியின் கீழேயே உள்ளது. இது அரசமைப்பை மீறும் செயல் – என்றார்.

Related posts: