உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Friday, July 9th, 2021

உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் சுமார் ஆயிரம் மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசிகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் ஏராளமான மாணவர்களிடமிருந்து ஃபைசர் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் கோரிக்கைகள் வந்தன.

சில நாடுகள் ஃபைசர் தடுப்பூசிகளை வழங்காமல் தமது நாடுகளுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை என்பதே இதற்கான காரணம்.

இதன் காரணமாக, சுமார் 987 மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை சுமார் 2 ஆயிரத்து 100 மாணவர்களும் வெளிநாடுகளில் கல்வி கற்ற செல்வதற்கு முன்னர் சினோபார்ம் தடுப்பூசி செலுத்தி கொள்ளவுள்ளனர். அத்துடன் மேல் மாகாணத்திற்கு வெளியே இருப்பவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசிகளை வழங்க அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


ஊரடங்கு உத்தரவு மீறிய குற்றம்; இதுவரை 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது – பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிப...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு தொடர்பில் ஜனாதிபதி சாதகமாக பரிசி...
தேவையான சேதனப் பசளையை விரைவில் விநியோகிக்க நடவடிக்கை - விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!