பங்களாதேஷிடம் பெற்ற கடனை அடைக்க தயாராகும் இலங்கை!
Monday, March 6th, 2023
பங்களாதேஷிடம் இருந்து பெற்ற கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை இலங்கை மேற்கொண்டு வருகிறது.
இலங்கையின் அன்னிய செலாவணி கையிருப்பை பராமரிக்கும் வகையில் இந்த பணம் பெறப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அரசாங்கம் இலங்கைக்கு ஆதரவாக பல சந்தர்ப்பங்களில் தொகையை செலுத்தும் திகதியை ஒத்திவைக்க ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலைில் இருநூறு மில்லியன் டொலர் கடனை எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் செலுத்துவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது.
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு உயரும் நிலையில் இந்த கடன் மீள் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
20 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசியாக Pfizer - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!
பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு மார்ச் 24 முதல் ஆரம்பமாகும் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
இலங்கையை மீள வகைப்படுத்துங்கள் - ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வேண்டுகோள...
|
|
|


