அரச நிகழ்வுகளை தனியார் விருந்தகங்களில் நடத்தத் தடை!

Saturday, December 8th, 2018

அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், உள்ளிட்ட சகல அரச நிறுவனங்களும் தமது நிறுவனம் சார்ந்த வைபவங்கள், கூட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை விருந்தகங்களில் நடத்துவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான சுற்றுநிரூபம் ஒன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு உட்பட்ட நிறுவனங்களது வைபவங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை அரசாங்கத்தின் கீழ் இயங்கும் கேட்போர் கூடங்கள், நிறுவனங்களில் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க நிகழ்வுகள் மற்றும் வைபவங்கள் அதிகளவான பணத்தை செலவிட்டு நட்சத்திர விருந்தகங்களில் நடத்தப்படுகின்றன. இதனால் ஏற்படும் வீண்விரயத்தினை தடுப்பதற்காகவும் அரச செலவினை கட்டுப்படுத்தும் நோக்கிலும் ஜனாதிபதியினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts: