தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டு – இலங்கையில் இதுவரையில் 30 ஆயித்திற்கும் அதிகமானோர் கைது என பொலிசார் தெரிவிப்பு!

Sunday, June 13th, 2021

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணிநேரத்தில் மேலும் ஆயிரத்து 353 நபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக ஒரே நாளில் அதிகளாவன கைதுகள் பதிவாகியுள்ளமை இது முதல் சந்தர்ப்பமாகும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 31ஆயிரத்து 395 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொழும்பு பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ட்ரோன் கமரா கண்காணிப்பு நடவடிக்கையின்போது தனிமைப்படுதல் உத்தரவை மீறியமைக்காக நேற்று 09 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம் நேற்று கொழும்பின 14 நுழைவு வாயில்களில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின்போது 3 ஆயிரத்து ,615 வாகனங்களில் 5 ஆயிரத்து 268 நபர்கள் வருகை தந்துள்ளனர். அவர்களில் 188 பேருக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: