புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம் அமுலாகும் நிலையில் நாட்டில் மின்வெட்டு ஏற்படுத்தப்படாடமாட்டாது – எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு!
Thursday, February 16th, 2023
இன்றுமுதல் புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம் அமுலாகும் நிலையில் நாட்டில் மின்வெட்டு இல்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் தௌிவுபடுத்தும் விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட பின்னரே மின்சாரக் கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பெரும்பாண்மை உறுப்பினர்களின் அனுமதியுடன் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிகளவு நேரம் மின்சாரத்தை துண்டித்தமையாலேயே முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்கு முன்னாள் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
குறைந்த செலவில் மின்விநியோகத்தை முன்னெடுக்க கடந்த காலங்களில் செயல்பட்டமையே தற்போதைய சிக்கல் நிலைமைக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் இன்றில் இருந்து மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இந்நிலையில்
இலங்கை மின்சார சபை முன்வைத்த புதிய மின் கட்டண உயர்வு யோசனைக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
ஆணைக்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் இதற்கு இணங்கியதன் அடிப்படையில், குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, 31 முதல் 60 அலகுகள் வரை தற்போது அலகொன்றுக்கு அறவிடப்படும் ரூ.10 என்ற தொகை இனி ரூ.37 ஆகவும், 61 முதல் 90 அலகுகள் பிரிவின் கீழ் ரூ.16 ஆக உள்ள கட்டணம் ரூ.42 ஆகவும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
91 முதல் 120 அலகுகள் வரையிலான பிரிவு மற்றும் 121 முதல் 180 அலகுகள் வரையிலான பிரிவுக்கு தற்போது விதிக்கப்படும் 50 ரூபாய் கட்டணம் 181 அலகுக்கு மேல் உள்ள ஒவ்வொரு அலகுக்கும் தற்போது வசூலிக்கப்படும் 75 ரூபாயிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அதன்படி, முதல் 30 அலகுகளுக்காக நிலையான கட்டணமாக 400 ரூபாயும், 31 முதல் 60 அலகுகள் வரை நிலையான கட்டணமாக 550 ரூபாயும், 61 தொடக்கம் 90 அலகுகள் வரை நிலையான கட்டணம் 650 ரூபாயாகவும் அதிகரிக்கப்படுகிறது.
மேலும், 91 முதல் 120 அலகுகள் வரையிலும், 121 முதல் 180 அலகுகள் வரையிலும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 1500 ரூபாயாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
|
|
|


