கிளிநொச்சியில் இராணுவ முகாம் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றம்!
Friday, May 7th, 2021
கிளிநொச்சி, மலையாளபுரம் பகுதியில் உள்ள இராணுவ முகாம் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், நேற்று நள்ளிரவுமுதல் அது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த சிகிச்சை நிலையமானது 230 படுக்கை வசதிகளைக் கொண்டதாகவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிகிச்சை நிலையமானது, கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் செயற்படவுள்ளதுடன் கிளிநொச்சி வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட குழாம் அங்கு சேவையில் ஈடுபடவுள்ளது.
குறித்த சிகிச்சை நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையிலுள்ள கிருஸ்ணபுரம் பகுதியில் ஏற்கனவே தொற்று நோயியல் சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டு அங்கு கொரோனா தொற்றுக்கு சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஹம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணி சீனாவுக்கு!
பொலிஸாருக்கு எதிராக முறையிட புதிய இணையத்தளம் அறிமுகம்!
நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை அரசியல் சாசனத்திற்கு அமைவாக எதிர்கொள்வதற்கு நடவடிக்கை - ...
|
|
|


