குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நலத்திட்ட உதவிகள் ஜூலை 1 முதல் வழங்கப்படும் – வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது!
Sunday, April 23rd, 2023
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் திட்டம் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் மூலம் தெரிவித்துள்ளது.
மாற்றுப் பாலினத்தவர்கள், பாதிக்கப்படக்கூடியவர்கள், வறுமையில் உள்ளவர்கள் மற்றும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் ஆகிய 4 வகைகளின் கீழ் இந்த நலத்திட்ட உதவி தொகைகள் வழங்கப்படும் என வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் நிதி உதவி பெறும் முதியோர்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்கவுள்ளது.
இந்த சமூக நலத்திட்டத்திற்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 3.7 மில்லியனுக்கும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நாளை வற் வரி சட்டமூலம் தொடர்பில் விவாதம்!
சுன்னாகம் மின் உற்பத்தி நிலையம் - நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!
சமூகம் தற்போது எமது தொழிலாளர்களை பார்க்கும் விதம் நரக வேதனையை தருகின்றது - பிரன்டிக்ஸ் நிறுவனத்தின் ...
|
|
|


