யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத்திற்கு  நீதிபதி இளஞ்செழியன் கடும் எச்ரிக்கை !

Wednesday, August 10th, 2016

யாழ் போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை கூடத்தில் ஒரு குழந்தையின் இறப்புக்குக் காரணமாக இருந்த மருத்துவத் தாதியான நிர்மலா என்பவரை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் உள்ளக இடமாற்றம் செய்திருந்தார்.

இந்த உள்ளக இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த தாதியசங்கம் பணிப்புறக்கணிப்புச் செய்திருந்தது.  உடனடியாக இது தொடர்பாக யாழ் மேல் நீதிமன்றம் கவனத்தில் எடுத்து குறித்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாகத் தடை செய்து அது தொடர்பான விசாரணையை இன்று தொடங்கியது.

இந்த விசாரணையின் போது  பெண்தாதி நிர்மலாவின் இடமாற்றத்திற்கு ஆதரவு தெரிவித்து அங்கு வந்திருந்த யாழ் தாதிய சங்க தலைவர் செயலாளர், உறுப்பினர்கள் நீதிபதி இளஞ்செழியனால் கடுமையா எச்சரிக்கை செய்யப்பட்டனர்.

விளக்கேந்திய சீமாட்டி என மக்களால் இன்றுவரை அழைக்கப்படும் புளோரன்ஸ் நைற்றிங் கேல் அம்மையாரால் போற்றப்பட்ட தாதியர் சேவையை நீங்கள் இழிவு படுத்துகின்றீர்கள். தவறு செய்ததாகக் கருதப்படும் ஒரு பெண் தாதிய உத்தியோகத்தரை, ஒழுக்காற்று நடவடிக்கைக்காக, அதற்குப் பொறுப்பான பணிப்பாளரால் உள்ளக இடமாற்றம் செய்யப்படுவதைக் கூட நீங்கள் எதிர்க்கின்றீர்கள். இவ்வாறு செய்வதற்கு உங்களுக்கு மனச்சாட்சி இல்லையா? நீங்கள் ஏதாவது தவறு விட்டால் உங்களை யாரும் கேட்ககூடாது, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கூடாது என்று நீங்கள் சிந்திக்கின்றீர்களா?

கொழும்பில் இருந்து உங்களுக்கு ஆதரவாக உங்கள் தாய்ச்சங்கம் அனுப்பிய ஆவணத்தைப் பார்க்கும் போது அந்தத் தாய்ச் சங்கத்திற்கு யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் எப்படியும் செத்துத் தொலையட்டும் என நினைக்கின்றார்கள் போல் தெரிகின்றது. உங்களுக்கு ஆதரவாக தென்னிலங்கையில் யாராவது ஒரு சங்கம் பணிப்புறக்கணிப்பு செய்ததா? அங்கு உள்ள சங்கங்கள் யாழ்ப்பாணம் கெட்டு நொந்து போனாலும் பிரச்சனை இல்லை. நீங்கள் பணிப்புறக்கணிப்பை நடாத்துங்கள் என்று உங்களுக்கு கூற அதை வைத்து நீங்கள் கூத்தாடுகின்றீர்களா?

இந்தப் பணிப்புறக்கணிப்புக்கு காரணமான பெண்தாதி நிர்மலா அடுத்து வரும் தவணைக்கு யாழ் மேல்நீதிமன்றில் ஆயராகவேண்டும். நிர்மலாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி குறித்த பணிப்புறக்கணிப்புக்கு தடை விதித்தார்.

தனது தீர்ப்பை நீதிபதி வாசித்து முடித்ததும் சட்டத்தரணி கனகசிங்கம் என்பவர் நீதிபதியின் தீர்ப்பை மீறி அங்கு வாதிட முற்பட்ட போது, ‘தீர்ப்பு வாசிக்கும் வரையில் பேசாமல் இருந்துவிட்டு இப்போ தீர்ப்பளித்த பின்னர் எதற்காக வாதாடுகின்றீர், உமது கட்சிக்காரர்களுக்கு நீர் திறமையான ஆள் என்று காட்ட நினைக்கின்றீரா‘? என நீதிபதி இளஞ்செழியன் கடும் தொனியில் சட்டத்தரணியை எச்சரித்து அவரை அப்புறப்படுத்தினார்.

Related posts: