மின்சார நெருக்கடி பிரச்சினையை தீர்ப்பதில் பொது மக்களும் பங்கேற்க வேண்டும் – இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் சங்கம் கோரிக்கை!

Saturday, January 29th, 2022

நாடளாவிய ரீதியில் தற்போது நிலவும் மின்சார நெருக்கடிக்கு தற்காலிக தீர்வாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மின்சார நெருக்கடி பிரச்சினையை தீர்ப்பதில் பொது மக்களும் பங்கேற்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை கடமைப்பட்டிருப்பதாகவும் ஆனால் நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் தொடர்ச்சியாக மின் விநியோகத்தை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அண்மைக்காலமாக இரண்டு மின்வெட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும், அது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களிலும் இவ்வாறான முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றை விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட அறிக்கைகள் உரிய முறையில் விநியோகிக்கப்படாமையால் இவ்வாறான சம்பவங்கள் மீளவும் இடம்பெறக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: