68 வருடங்களின் பின்னர் பெரிய நிலவை காணும் சந்தர்ப்பம் இன்று!

Monday, November 14th, 2016

68 வருடங்களின் பின்னர் மிகப் பெரிய நிலவை காண்பதற்கான சந்தர்ப்பம் இலங்கையிலுள்ள மக்களுக்கு இன்று கிடைத்துள்ளதாக இலங்கை கோள் மண்டலம் அறிவித்துள்ளது.

68 வருடங்களின் பின்னர் பூமியில் இன்றைய தினம் மிகப் பெரிய நிலவை வெற்றுக் கண்களால் அவதானிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது சாதாரணமான நிலவின் தோற்றத்திலும் பார்க்க 14 மடங்கு பெரிய நிலவினை அவதானிக்கலாம் எனவும், அதன் பிரகாசம் சாதாரண முழு நிலவின் பிரகாசத்திலும் 30 வீதம் அதிகமாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த நிகழ்வு 18 வருடங்களின் பின்னர் எதிர்வரும் 2034 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி மீண்டும் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

super-moon

Related posts: