உயிர் நீத்த அனைவரையும் கவலையுடன் நினைவு கூறுகிறேன் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, April 21st, 2020

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்த அனைவரையும் கவலையுடன் நினைவு கூறுகின்றேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலஙடகையில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த பயங்கரவாத தாக்குதலின் முதலாவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.  இது தொடர்பில் ஜனாதிபதி தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளதாவது,

“கொடூரமான உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடந்து இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துவிட்டது. இன்றைய தினம் இந்தத் தாக்குதலில் உயிர்நீத்த, காயமடைந்த மற்றும் அங்கவீனமுற்ற இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் அனைவரையும் கவலையுடன் நான் நினைவு கூறுகின்றேன்.

இலங்கையர்களாகிய அனைவரும் காலை 8.45 மணிக்கு விளக்கேற்றி ஒரு நிமிடம் அவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்துமாறு உங்கள் அனைவரிடமும் நான் கேட்டுக்கொள்கின்றேன்” என முகப்புத்தகத்தில் பதிவிட்டுடிருந்ததுடன் இந்த தாக்குதலில் உயிர் நீத்தவர்களைநினைவு கூறும் நிகழ்வுகள் நாடு தழுவிய ரீதியில் இனம் மத பேதமின்றி அனைவராலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதுவேளை உயிர்த்த ஞாயிறு தீவிரவாதத் தாக்குதலில் மரணித்த, காயமடைந்த, அங்கவீன நிலைமைக்கு உட்பட்ட அனைவரையும், தாம் பின்பற்றும் சமயத்திற்கு ஏற்ப நினைவுபடுத்துமாறு அனைத்து இலங்கையரிடமும் வேண்டிக்கொள்கிறேன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்

உயிர்த்த ஞாயிறு தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

Related posts: