ஊவா, கிழக்கு, வட மத்திய மாகாணங்களின் பல பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் சாத்தியம்!
Saturday, July 17th, 2021
ஊவா, கிழக்கு, மற்றும் வட மத்திய மாகாணங்களின் பல பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் பல மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்கள் இடைக்கிடையே கொந்தளிப்பாக இருக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
நல்லூரில் வாகனப் பாதுகாப்பு நிலையங்கள் சில நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலும் அதிக தொகை வசூலிப்பதாகக் கு...
தேர்தல் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சீ.டீ. விக்ரமரத்ன நியமனம்!
அபாயகரமான வெடிபொருட்கள் இருக்கும் என நம்பப்படுவதால் துப்பரவு பணிகளை மேற்கொள்வதில் இடர்பாடுகளை சந்தி...
|
|
|


