டெங்கு நோய் தீவிரமாக பரவக்கூடிய அபாயம்!

Friday, November 18th, 2016
நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தவரும் காரணத்தால் அடுத்து வரும் மாதங்களில் டெங்கு நோய் தீவிரமாக பரவக்கூடிய அபாயம் நிலவுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுகாதார போசாக்கு மற்றும் சுதேஷிய வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்வின் ஆலோசனைக்கு அமைய கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு இருநாள் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அமுலாக்கப்பட்டது. இதன் முடிவில் அறிக்கை வெளியிடப்பட்டது. அறிக்கையில் மேல் மாகாணத்தில் 12ஆயிரத்திற்கு மேற்பட்ட இடங்கள் சோதனையிடப்பட்டு, நுளம்புகள் பெருகக்கூடிய 500க்கு மேற்பட்ட ஸ்தலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் 867 பேருக்கு எச்சரிக்கை அறிவித்தலும் , 316 பேருக்கு எதிராக வழக்கு தொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு கடந்த 10ம், 11ம் திகதிகளில் முன்னெடுத்த வேலைத்திட்டத்தில் டெங்கு நுளம்பு குடம்பிகள் பரவக்கூடிய வாய்ப்பினை கண்டறிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பாடசாலைகளிலும், கட்டுமாண ஸ்தலங்களிலும் கூடுதலான குடம்பிகளை கண்டறிய முடிந்ததென டெங்கு ஒழிப்பு பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் டொக்டர் ஹசித்த திசேரா தெரிவித்தார்.

மொத்தமாக 120 பாடசாலைகள் சோதிக்கப்பட்டன. இவற்றில் 48 பாடசாலைகளில் நுளம்பு குடம்பிகள்க பிடிக்கப்பட்டன.  150க்கு மேற்பட்ட கட்டுமாண ஸ்தலங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 53 இடங்களில் குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக டொக்டர் திசேரா தெரிவித்தார்

இதனடிப்படையில் 83 பேருக்கு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டதோடு, 32 பேருக்கு எதிராக வழக்கு தொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தொழிற்சாலைகள் சார்ந்த 133 சுற்றுச்சூழல்களும் சோதிக்கப்பட்டன. இவற்றில் 38 இடங்களில் நுளம்பு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் 39 பேருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படவுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

 555

Related posts:

வெளிநாடுகளில் இருந்து ஆடை இறக்குமதி செய்வது முற்றாக தடை - வெளியிட்டுள்ளதாக பற்றிக் மற்றும் கைத்தறி ந...
கொரோனா தொடர்பில்ட நாடு செல்ல வேண்டிய திசையை மக்களே தீர்மானிக்க வேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங...
பிரதமர் பங்கேற்பு – “புதிய கிராமம் - புதிய நாடு” தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட முன...