பிரதமர் பங்கேற்பு – “புதிய கிராமம் – புதிய நாடு” தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட முன்னேற்ற மீளாய்வு கூட்டம்!

Saturday, August 5th, 2023

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்துவதற்கான கிராமியப் பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுப்படுத்துவதற்கான பல்துறை இணைந்த பொறிமுறை தொடர்பான “புதிய கிராமம் – புதிய நாடு” தேசிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முன்னேற்ற மீளாய்வு தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சந்திரகாந்தனின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களது ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (04) திகதி இடம்பெற்றது.

இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதம அதிதியாக கலந்துகொண்ட நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் ஹாபீஸ் நசீர் ஹகமட், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர்களான ஜனக வக்கும்வெற, அசோக் பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன், இரா.சாணக்கியன், உணவு பாதுகாப்பு திட்டத்திற்கான ஜனாதிபதி ஆலோசகர் சுறேன் வட்டகொட, உள்ளிட்ட அமைச்சு மற்றும் திணைக்களங்களின் உயரதிகாரிகள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

உணவு பாதுகாப்பு திட்டத்திற்கான ஜனாதிபதி ஆலோசகர் சுறேன் அவர்களது உணவு பாதுகாப்பு தொடர்பான உரையினை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு பாதுகாப்பு தொடர்பான பல்வேறு திட்டங்கள் தொடர்பாக இதன்போது மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி.கலாமதி பத்மராஜா விரிவாக விளக்கமளித்ததிருந்தார்.

குறிப்பாக இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சந்திரகாந்தன் அவர்களால் மாவட்டத்தின் உற்பதியினை அதிகரிக்கும் பொருட்டும் உணவு உற்பத்தியில் தன்னிறைவடையும் முகமாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் மீன் மற்றும் இறால் வளர்ப்பு திட்டங்களை விரைவுபடுத்துவது தொடர்பிலும் இத்திட்டதிற்கென புதிய முதலீட்டாளர்களுக்கு அரச காணிகளை பகிர்ந்தளிப்பது தொடர்பிலும் விஷேட கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

தேசிய பட்டியில் பிரதிநிதிகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டால் ஆகஸ்ட் 12 இல் புதிய அமைச்...
கை கழுவும் திரவங்களை பயன்படுத்தியபின் விளக்குகளை ஒளிரச் செய்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள் - மக்களுக்கு...
முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ள தயாரிக்கப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைச்சரவை அனுமதி!