யாழ்ப்பாணத்தில் வெங்காய விளைச்சல் அதிகரிப்பு – சந்தை பெறுமதியும் உயர்வாக உள்ளதாக செய்கையாளர்கள் பெருமகிழ்ச்சி!

Tuesday, August 3rd, 2021

யாழ். மாவட்டத்தில் வெங்காய விளைச்சல் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு குறித்த வெங்காயச் செய்கையாளர்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கான மானியங்களையும் பரிகாரங்களையும் அரசினூடாக பெற்றுக் கொடுத்திருந்தார்.

இதையடுத்து அதிலிருந்து மீண்ட விவசாயிகள் குறிப்பாக வலிகாமம் பிரதேச வருடாவருடம் விவசாயிகள் இவ்வருடம் கொரோனா தொற்றின் தாக்கத்துக்கு மத்தியிலும் பெருமெடுப்பில் குறித்த பயிர் செய்கையை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் இவ்வருட விளைச்சலின் ஊடாக அவர்களது உழைப்புக்கு பலன் கிடைக்கவுள்ளதாகவும் குறித்த விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனிடையே நாட்டின் வெங்காய உற்பத்தியில் 75 வீதமான வெங்காயம் யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்றது.

இதில் குறிப்பாக யாழ். மாவட்டத்தின் வலிகாமம் மற்றும் வடமராட்சி பகுதிகளில் அதிகளவு வெங்காய செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.

அங்கிருந்தே கொழும்பு உட்பட பிற மாவட்டங்களுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

எனினும், பருவ மழை மாற்றத்தினால் கடந்த இரு போக வெங்காய செய்கை அழிவடைந்தது. இதனால், விவசாயிகளின் வருமானம் வீழ்ச்சியடைந்ததுடன், வெங்காயத்தின் விலையும் அதிகரித்திருந்தது.

இம்முறை பருவப்பெயர்ச்சி மழையின் சாதகத்தினால் வெங்காய செய்கை அறுவடை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

அத்துடன் சந்தை பெறுமதியும் சிறப்பாக உள்ளதால் குறிப்பாக ஒர கிலே வெங்காயம் 200 ரூபாவுக்கும் அதிகமாக நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுவதால் தமது வாழ்வாதாரத்துக்கான பொருளாதார ஈட்டல் சிறப்பாக கிடைக்கப்பெற்ற வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: