தொடருந்து போக்குவரத்தில் ஜீ.பி.எஸ் தொழில்நுட்பம் – இராஜாங்க அமைச்சர் சீ.பி. ரத்னாநாயக்க!

Saturday, November 30th, 2019

தொடருந்து போக்குவரத்துக்காக ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தை பெற்று கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து சேவை இராஜாங்க அமைச்சர் சீ.பி. ரத்னாநாயக்க தெரிவித்துள்ளார்.

தொடருந்து போக்குவரத்தை சிறந்த மற்றும் பாதுகாப்பான சேவையாக மாற்றும் நோக்கிலே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடருந்து சேவை முகாமைத்துவத்திற்காக, தொலைபேசி மூலம் தகவல்களைப் பெற்று, கையெழுத்து மூலம் ஆவணப்படுத்தும் முறைமையே சில பகுதிகளில் உள்ளது.

இந்த நிலையில், சில பகுதிகளுக்கு ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தை வழங்கி, அதனூடாக கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சீ.பி. ரத்னாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts:

அரசியல் கட்சிகளின் உத்தியோகபூர்வ பெயர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஐவர் அடங்கிய குழு நியமனம்!
தேவையான எரிபொருள் இருப்புகளை வழங்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளதாக – எரிசக்தி அமைச்...
கடும் எரிபொருள் நெருக்கடி - பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு அன...

அமைச்சரவையில் மௌனமாகயிருந்தவர்கள் தற்போது அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர்- அமைச்சர் நாமல் சுட்டிக்காட்...
உள்ளுர் கைத்தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை - அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
நீண்டகால முதலீடுகளை ஊக்குவிப்பது உட்பட இலங்கையின் பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும...